தேவையிருக்கின்ற போதெல்லாம்
உன் கைகள் பின் தொடர்கின்றன
கைகள் தோல்வியுறும்போது
உன் வார்த்தைகள் தொடர்கின்றன
நான் தோற்கும்போது
உன் முழு வாழ்வும் தொடர்கின்றது
ஆனால்
நீ ஏன் என்னுடன் இல்லாதிருக்கிறாய்?
ஏன் இந்த கண்ணாமூச்சி?
வெறும் மரப்பாவையாக
இருக்கத்தான் உன் விருப்பமா?
என் கைகள் மூலமாக
எல்லையற்றதை
தொட்டு ருசிக்க உனக்கு
ஏக்கமில்லையா?
கண்டிராத காட்சிகளை
என் கண்கள் வாயிலாக காண
உனக்கு விருப்பமில்லையா ?
என்னை உண்டு விழுங்கி
நானாகவே மாறிப்போக
உனக்கு தாகமில்லையா ?
பின் ஏன் காத்திருக்கிறாய்?
அகல விரித்த கைகளோடு
உன் கதவருகே
காத்திருக்கிறேன் நான் ..
வா..
நானாகிப்போ ..
இல்லை
எனைக் கொன்று போ ...
உன் கைகள் பின் தொடர்கின்றன
கைகள் தோல்வியுறும்போது
உன் வார்த்தைகள் தொடர்கின்றன
நான் தோற்கும்போது
உன் முழு வாழ்வும் தொடர்கின்றது
ஆனால்
நீ ஏன் என்னுடன் இல்லாதிருக்கிறாய்?
ஏன் இந்த கண்ணாமூச்சி?
வெறும் மரப்பாவையாக
இருக்கத்தான் உன் விருப்பமா?
என் கைகள் மூலமாக
எல்லையற்றதை
தொட்டு ருசிக்க உனக்கு
ஏக்கமில்லையா?
கண்டிராத காட்சிகளை
என் கண்கள் வாயிலாக காண
உனக்கு விருப்பமில்லையா ?
என்னை உண்டு விழுங்கி
நானாகவே மாறிப்போக
உனக்கு தாகமில்லையா ?
பின் ஏன் காத்திருக்கிறாய்?
அகல விரித்த கைகளோடு
உன் கதவருகே
காத்திருக்கிறேன் நான் ..
வா..
நானாகிப்போ ..
இல்லை
எனைக் கொன்று போ ...
No comments:
Post a Comment