Sunday, October 21, 2012

நீயும் நானும் (தொடர்ச்சி 2 )


என்மேல் கோவமும் உண்டு – அது
இல்லா சில பாவம் கண்டு
உணர்ந்தேன் பலநாள் மண்டு
ஹா! ஹா! ஹா!
சிரித்துக் கொள் என் எதுகை கண்டு !
..
கற்பனையின் உச்சகட்டம் – சிலநேரம்
அற்பமாகத் தோன்றும் ..
நீ முதல் மனுஷி
நான் முதல் மனுஷன்
அறிவு பெற ஆப்பிள் சண்டை
ஆனால் இம்முறை
காதல் அன்று – இது
காதல் அன்று – அன்றி
மோகமும் அன்று பின்
சோகத்தில் விளைந்த பாசமும் அன்று
இது நட்பு.. இது நட்பு...
...
ஆதாமும் ஏவாளுமாக
செல்லம்  நீயும் கண்ணா என நானும்
உலகம் நட்பால் ஆகப்பெறும் !
உரைக்கச் சொல்வோம் உலகிற்கு
இன்னும் இருக்கிறது உலகம் – அதில்
நீயும் இருப்பாய் என்னோடு !
...
முருகனைப் பிடிக்கும் உனக்கு
கிருஷ்ணனைப் பிடிக்கும் எனக்கு
என்ன செய்வது ?
தூரத்துச் சொந்தம் அல்லவா
நம் நட்பைப் போல!
...
முதல் முறை புகைத்தது – பின்
முதன்முறை குடித்தது – இன்னும்
பலமுறை நினைத்தது – இவை
யாவும் நான் படைத்தது – உன்
செவிகளில் நான் அடைத்தது !
எனக்குக் கிடைத்தது – உன்
வேகமும் விவேகமும் – உன்
பக்குவம் அதன் பக்குவம் – உன்
அறிவுரை அதை மீண்டும் உரை
ஏன் என்று கேட்காதே
உன் வார்த்தை பிடிக்கும் எனக்கு
இன்னும் கடிந்து சொல்
மிகவும் பிடிக்கும் எனக்கு
ஏங்கித் தவிக்கப் போகிறேன்
இந்த சொற்போர் நினைத்து...
போர்க்களத்தில் நாம்,
நடப்பது மனப்போர் – நம்
நட்பு தேசம் யாருக்கு?
உனக்கா இல்லை எனக்கா?
காலம் பதில் சொல்லும் – எதிர்
காலம் பதில் சொல்லும்!
மனம் விட்டுச் சொல்கிறேன் – நீ
மனம் விட்டுச் சிரிப்பாய் – என்
மனம்  சொல்லும் கவிகேட்டு – நீ
மனம் விட்டுச் சிரிப்பாய் !
அது போதும் எனக்கு
கைம்மாறு கருதா உதவி
இது நட்பு..இது நட்பு...
..
தொலைந்து போன ஜிமிக்கியும் – என்
தொலைந்து போன மோதிரமும்
இணைக்கும் நமை !
தங்கம் பிடிக்காது எனக்கு – அதன்
வண்ணம் பிடிக்காது – விதி
யாரை விட்டது ?
தங்கமாக நீ – பிடிக்கும் இப்போது எனக்கு
இது கொஞ்சம் அதிகமோ – என
கேட்பது புரிகிறது
என்ன செய்ய செல்லம்?
வாழ்க்கை அப்படித்தான் – நம்
வார்த்தைகள் மாறினாலும்
வாழ்க்கை அப்படித்தான் ...
..
பால் மிட்டாய் பிடிக்கும் உனக்கு
என்ன யோசனை ?
ஆங்கில மிட்டாயின் தமிழாக்கம்
மிகவும் பிடிக்கும் உனக்கு
அதுவும் பெரிதாக இன்னும் பெரிதாக
வாசிக்கப்  பிடிக்கும் உனக்கு – கதை
வாசித்துப் பின் யோசிக்கவும் பிடிக்கும்
நேசிக்கவும் செய்கிறாய் தோழி
எனையும் என் தொல்லையையும்!
...
பல ஆசைகள் எனக்கு
எங்கள் ஊர் தீயல்,
ரசத்தில் ஊறிய வடை,
முக்கடல் சங்கமம்,
ஆஞ்சநேயர் சந்நிதி,
இன்னும் பல – இவை
யாவும் பார்க்க வா நீ!
துணைக்கு வருவேன் நான் !
...
உன் அழகான ‘ஆமா’-வும்
குறும்பான ‘போடா’-வும் கூட
சமயங்களில் ருசிக்கும் ...
குழந்தைச் சிரிப்பு பிடிக்கும் எனக்கு
குழந்தையாகச் சிரிக்கப் பிடிக்கும் உனக்கு
குறும்புப் பார்வை பிடிக்கும் எனக்கு
குறும்பாகப் பார்க்கும் – உன்
நிழற்படமும் பிடிக்கும் !
....
எத்தனை விஷயங்கள்- அதில்
எத்தனை சுவைகள்
நவரசம் நம் நட்பு!
உரைக்கச் சொல்வோம் உலகிற்கு
இன்னும் இருக்கிறது உலகம் – அதில்
நீயும் இருப்பாய் என்னோடு!
..
மழை பிடிக்கும் எனக்கு – அதில்
நனையவும் பிடிக்கும்
மழை எனில் பயம் உனக்கு
பிறர் சொல் கண்டு..
சுடச்சுட தேநீர் பிடிக்கும் எனக்கு
அதில் நாக்குப் பொத்துப் போக
படபட என குளிர்ந்த நீரும் பிடிக்கும்..
சமையல் தெரியும் எனக்கு
வியப்பில்லை , உனக்கும் கூட !
கவனம் பிடிக்கும் எனக்கு – சுற்றி
நிகழும் அதிசயங்களில்
‘கவனமாகப் போ ‘ என வரும்
உந்தன் பாசக்கட்டளையும் பிடிக்கும் ..
வேகம் பிடிக்கும் – அதில்
மிகவேகம் பிடிக்கும் – ஆனால்
சோகம் பிடிக்காது எனக்கு !
பேசப் பிடிக்கும் எனக்கு – பிறர்முன்
நா வலிக்கப் பேசப் பிடிக்கும்
நீயுந்தான் !
பட்டப்பெயரே உண்டு உனக்கு
‘அரட்டைப்பெட்டி’ என
கோவப்படாதே செல்லம்
இயல்பாகத்தான் பேசுகிறாய்
சில சமயம் மௌனமாகவும்
அது பிடிக்கும் எனக்கு...

No comments:

Post a Comment