ஒளிரும் வானும்
மயங்கிய நிழல்களும்
மிளிரும் கண்களும்
தவிர்க்கவியலா கண்ணீரும்
உன்னத உதவிகளும்
போலிப் புன்னகைகளும்
முன்னேற விடா
முட்டுக்கட்டைகளும்
பின்னின்று குத்தும்
பிறண்டுபோன வாக்கும்
முன்னின்று எதிர்க்கும்
முன்னேற்பாடும்
வதைப்பும்
மீண்டு எழுதலும்
சிதைந்து போன
நினைவுகளும்
மறக்க விரும்பும்
மனசாட்சியும்
அதட்டலும்
அதிகாரமும்
அத்துமீறலும்
அநியாயமும்
இன்னும் எத்தனை வரினும்
அவ்வப்போது நிகழும்
தோள்தட்டலும்
தேவையறிந்து நிகழும்
அரவணைப்பும்
எது நடப்பினும்
இதமாய் என் பின்னே நிற்கும்
நீயும் இருக்க,
வெற்றியும் புகழும்
ஏற்கெனவே நம் பக்கம்
இனி
வீழ்ந்து போவதும்
மீண்டு பிறத்தலும்
நீ எனக்கு கொடுத்த
வரம்...
மயங்கிய நிழல்களும்
மிளிரும் கண்களும்
தவிர்க்கவியலா கண்ணீரும்
உன்னத உதவிகளும்
போலிப் புன்னகைகளும்
முன்னேற விடா
முட்டுக்கட்டைகளும்
பின்னின்று குத்தும்
பிறண்டுபோன வாக்கும்
முன்னின்று எதிர்க்கும்
முன்னேற்பாடும்
வதைப்பும்
மீண்டு எழுதலும்
சிதைந்து போன
நினைவுகளும்
மறக்க விரும்பும்
மனசாட்சியும்
அதட்டலும்
அதிகாரமும்
அத்துமீறலும்
அநியாயமும்
இன்னும் எத்தனை வரினும்
அவ்வப்போது நிகழும்
தோள்தட்டலும்
தேவையறிந்து நிகழும்
அரவணைப்பும்
எது நடப்பினும்
இதமாய் என் பின்னே நிற்கும்
நீயும் இருக்க,
வெற்றியும் புகழும்
ஏற்கெனவே நம் பக்கம்
இனி
வீழ்ந்து போவதும்
மீண்டு பிறத்தலும்
நீ எனக்கு கொடுத்த
வரம்...
No comments:
Post a Comment