Wednesday, October 17, 2012

நேற்றைய நீயும் இன்றைய நானும் ...

நொடிப் பொழுதில்
எவரும் அறியாமல்
பகிர்ந்து கொண்ட
சிமிக்கைகளும் ..

எல்லோர் முன்பு
துணிந்து காட்டும்
திமிரும் சிரிப்பும்...

தனித்தனியாக
புலம்பிச் சிரித்த
திரும்பிவரா தித்திப்பும் ...

ஓர் இரவின்
உச்சகட்ட உரையாடலும்
மேலும் போய்
உணர்வும் உரிமையும் ...
உள்ளூர உறைந்திருக்கும்
உரைக்கவியலா
உண்மையும்..

அது தெரிந்து
அண்மை தவிர்க்கும்
அழகும்
அது சார்ந்த அறிவும் ...

எண்ணிலா கனவுகளை
எதிர்பார்த்து காத்திருக்கும்
இன்றைய இரவும்..

பிடித்த நிறத்திற்கான
பிடிவாதமும் ...
பாடிய  பாடலின்
ஆழமும் ஆத்மார்த்தமும் ..

யாருக்கும் தெரியாத
ரகசியப் பகிர்தலும் ..

சின்ன சந்தோஷத்தின் பொருட்டு
பிடித்துப் போன
பெயர் மாற்றமும் ..

சிரிக்காத நொடிகளுக்காக
சட்டென மாறும் முகமும்..
மனமும்
அதன் சாட்சியாக
நீயும்
பின் நானும்
..
...
இப்படியே
அதுவாகி
இதுவாகி
எதுவெதுவோ ஆகிப் பின்
நாமாகிப் போன
நட்பு...
...
நீடிக்கட்டும்
எனை மறந்து நீயும்
உனை மறந்து நானும்
கடைசியாக
உறங்கிப் போகும் வரை..
.....






No comments:

Post a Comment