Monday, October 22, 2012

உனக்கான என் நள்ளிரவு கவி ..


உனக்கான என்
நள்ளிரவுக் கவிதை
என் மூச்சுக்காற்றில்
கலந்து விட்டிருக்கிறேன் ,,,
எனை நீ
தேடித்தவிக்கும் போது
யாருமற்ற நதிக்கரையில்
சுவாசமற்று வீழ்ந்து கிடக்கிறேன்
உன் கை வந்து
சேர வேண்டிய பூக்கள்
எனைத் தாண்டி
விரைந்து செல்ல
உன் புகைப்படக் கண்களில்
சிக்கி மூச்சு முட்டுகிறேன்
கற்பனையில் கரைந்து போன நீ
காற்றோடு காற்றாக வந்து
எனை உன் கூந்தல் சுருளில்
கட்டி இழுத்துப் போ ..
என கடந்த, நிகழ் , எதிர் கால
நினைவுகளை
மொத்தமாக சுருட்டிப் போ..
ஒரே ஒரு இச்சை ..
என் கடைசி மூச்சில்
எனைக் காண நேரின்
மூடிப் போகும் இமைகளில்
ஒரே ஒரு முத்தம் மட்டும் கொடு...
கண்ணம்மா
ஒரே ஒரு முத்தம் கொடு ...


No comments:

Post a Comment