இதழின் ஓரமாக
ஒரு சின்னக்குழியில்
தோன்றி மறையும்
ஒரு நொடிப் புன்னகை...
கதவின் ஓரமாக
கண்ணிமைப்பில்
சாய்ந்து சிணுங்கும்
ரெட்டைஜடை...
மெல்லிய வார்த்தைகளின்
தவறான உச்சரிப்புகள் ..
தவறான பொழுதுகளின்
தவிக்கின்ற நிதானம்...
தவிர்த்துப் போவென
தொடரும் தழுவல்கள்...
நில்லென சொல்லும்
நடுநிசி நெஞ்சு...
நெடுநாள் நீண்ட
நீங்கா நெருடல்...
படிக்கப்படாத கடிதம்...
துவைக்கப்படாத கைக்குட்டை...
தும்மல் வரும் கணங்கள்...
இருந்து ரசித்த
இடைவெளியற்ற இருக்கைகள்...
இல்லாமல் போன
மெல்லிய இடைவெளி...
சத்தமில்லா சுட்டித்தனம்...
நித்தம் தொடர்ந்த
தூக்கமற்ற இரவுகள்...
பின்னிரவின்
காதோர கோரிக்கைகள்...
கடைசி நிமிட
உச்ச மூச்சுக் காற்று...
உமிழ்நீர் தாகத்தீர்ப்பு...
விட்டுவிட்டு துடித்த இமைகள்
இல்லாததுபோன்ற இருதயம்...
நிறைவேற்ற கண்ணீர்த்துளி ...
நாளை பற்றிய
நினைப்புகள்..
சுற்றம் குறித்த
நன்றியறிதல்..
குற்றம் பார்த்த
குறுகிய கிறுக்கர்கள்...
நாளும் நாலும்
பார்த்து செய்த
பக்குவ பாசாங்குகள்...
விறைத்து செய்த
வீண் வம்புகள்..
வேண்டாவெறுப்புகள்..
விண்ணைத்தாண்டிய
வளர்ச்சி..
விமர்சனங்கள்..
வித்தியாசங்கள்..
தொடர்ந்து வந்த வினைகள்..
விளைவுகள்..
குறுகலாகிப்போன
ஒரே பயணப் பாதை ..
கூனிக்குறுகி
ஒடிந்து நின்ற
ஒற்றைப் பனைமரத்தடி...
வேறு வழியற்றுப் போன
விபரீத முடிவு...
விடைபெறாது
வந்துவந்து போன
வசனங்கள்...
ஒட்டிக் கொண்டிருந்த
உயிர் தாங்கிய
மஞ்சள் கயிறு...
...
...
சேமிக்கப்பட்ட தவறுகள் ..
..
..
இப்போது நானும்
கூட நீயும்
மறுஜென்மத்தில்...
...
ம் ..ம் ..
ஒரு சின்னக்குழியில்
தோன்றி மறையும்
ஒரு நொடிப் புன்னகை...
கதவின் ஓரமாக
கண்ணிமைப்பில்
சாய்ந்து சிணுங்கும்
ரெட்டைஜடை...
மெல்லிய வார்த்தைகளின்
தவறான உச்சரிப்புகள் ..
தவறான பொழுதுகளின்
தவிக்கின்ற நிதானம்...
தவிர்த்துப் போவென
தொடரும் தழுவல்கள்...
நில்லென சொல்லும்
நடுநிசி நெஞ்சு...
நெடுநாள் நீண்ட
நீங்கா நெருடல்...
படிக்கப்படாத கடிதம்...
துவைக்கப்படாத கைக்குட்டை...
தும்மல் வரும் கணங்கள்...
இருந்து ரசித்த
இடைவெளியற்ற இருக்கைகள்...
இல்லாமல் போன
மெல்லிய இடைவெளி...
சத்தமில்லா சுட்டித்தனம்...
நித்தம் தொடர்ந்த
தூக்கமற்ற இரவுகள்...
பின்னிரவின்
காதோர கோரிக்கைகள்...
கடைசி நிமிட
உச்ச மூச்சுக் காற்று...
உமிழ்நீர் தாகத்தீர்ப்பு...
விட்டுவிட்டு துடித்த இமைகள்
இல்லாததுபோன்ற இருதயம்...
நிறைவேற்ற கண்ணீர்த்துளி ...
நாளை பற்றிய
நினைப்புகள்..
சுற்றம் குறித்த
நன்றியறிதல்..
குற்றம் பார்த்த
குறுகிய கிறுக்கர்கள்...
நாளும் நாலும்
பார்த்து செய்த
பக்குவ பாசாங்குகள்...
விறைத்து செய்த
வீண் வம்புகள்..
வேண்டாவெறுப்புகள்..
விண்ணைத்தாண்டிய
வளர்ச்சி..
விமர்சனங்கள்..
வித்தியாசங்கள்..
தொடர்ந்து வந்த வினைகள்..
விளைவுகள்..
குறுகலாகிப்போன
ஒரே பயணப் பாதை ..
கூனிக்குறுகி
ஒடிந்து நின்ற
ஒற்றைப் பனைமரத்தடி...
வேறு வழியற்றுப் போன
விபரீத முடிவு...
விடைபெறாது
வந்துவந்து போன
வசனங்கள்...
ஒட்டிக் கொண்டிருந்த
உயிர் தாங்கிய
மஞ்சள் கயிறு...
...
...
சேமிக்கப்பட்ட தவறுகள் ..
..
..
இப்போது நானும்
கூட நீயும்
மறுஜென்மத்தில்...
...
ம் ..ம் ..
No comments:
Post a Comment