மௌனத்தில் ஆழ்ந்திருக்கும்போது
நான் மட்டும் எப்படி
வார்த்தைகளுடன் சல்லாபித்திருப்பது?
அவளது புலன்களனைத்தும்
மோட்சம் தேடி தியானித்திருக்கையில்
என்னவை மாத்திரம் எப்படி
மோகம் தேடி அலைய முடியும்?
அவளது எண்ணம்
எனைத்தாண்டி எங்கோ
உறைந்திருக்கும்போது
எனது எண்ணம்
அவளை மட்டுமே
சுத்தி சுத்தி
சோர்ந்து போவது ஏனோ?
எனது கவிதைக்கான
ஒரே உச்சகட்ட பெருமை
எட்ட முடியா அருகாமையில்
இருக்கும்போது
என் பேனா உயிர்த்திருப்பது
இன்னும் எப்படி சாத்தியம்?
உயிர்த்துடிப்பின் உச்சத்தை
எனக்கு உணர்த்திய
அவளது உள்ளங்கை
உருவமற்றுப் போன பின்
என் கண்கள்
உறக்கம் கொள்வது
எப்படி சாத்தியம்?
என் சுவாசத்தின் வாசம்
தீர்ந்துபோன பின்
இருக்கிறேன் ..
இன்னமும் நான்....
உன் ஒவ்வொரு நொடி
இல்லாமையும்
என் வாசகர்கள் முன்
எனை இழிவுபடுத்தும் என்பதை
ஏன் உணராமல் போனாய்?
என் கவிதையை
மீட்டெடுக்கவாவது
வந்து சேர்...
No comments:
Post a Comment