நீயாக நீ இருந்தால்
நானாக நான் இருப்பது
எப்படி சாத்தியம்?
இதனால் தான் நான்
உன்னை நெருங்குவதே இல்லை ...
உன்னில் இருக்கின்ற எதுவும்
என்னை கடந்து போகாமல்
கவர்ந்து போவதால் தான்
நான் உன்னை நெருங்குவதே இல்லை ...
உனக்கான எதுவும் என்னில்
இல்லாவிடில் என்னவாகும்
என்ற எண்ணத்தில் தான்
நான் உன்னை நெருங்குவதே இல்லை...
எதை எதையோ செய்து முடிக்கின்ற
என் சக்தி மிக்க மனது
உன்னால் சாத்தியமற்று இருப்பதால் தான்
நான் உன்னை நெருங்குவதே இல்லை...
இதனை இவள் வசம் எப்படி சேர்ப்பது
என்ற எண்ணத்திலேயே - என்
சுவாசம் வீணாகிப் போவதால் தான்
நான் உன்னை நெருங்குவதே இல்லை...
பார்...
தலை நிமிர்ந்து சுத்தும்
என் வார்த்தைகளையே
வெட்கப் பட வைக்கிறாய் நீ...
இத்துடன் நிறுத்திக் கொள்
உனக்கான என் நெருக்கம்
எனக்குள்ளேயே நிகழட்டும்...
நான் நீயாகிப் போகும் நாள்
வெகு தூரம் இல்லை ....
nice kutti bharathi
ReplyDelete