எனக்கான ஏக்கத்தின் வெளிப்பாடா?
இல்லை
உனக்கான என் பாசத்தின் மதிப்பீடா?
இதுவரை நிகழ்ந்தவையே நிறைந்திருக்க
இன்னும் இடமில்லை
உன் சார்ந்தவற்றை நிறைக்க ..
எல்லாம் தெரிந்தும்
எதுவும் தெரியாமல்
நிகழ்காலத்தில் வாழ்வது
உனக்கு மட்டுமே சாத்தியம் ...
இது எனக்கு வாய்க்கப் பெறும் நாள்
உனக்கான என் காதலை
காற்றில் கலந்து விடுவேன் ...
தேடினாலும் கிடைக்காமல்
முகவரியை மூடி வைத்து
தொலை தூர கானகத்தில்
நான் மட்டும் தனியே நடந்திருப்பேன் ...
மீட்கப் போராடி - உன்
சுவாசத்தை விரையம் செய்யாதே
உன் வருங்கால வருத்தங்களுக்கு
ஆறுதல் சொல்ல நானில்லாத போது
என் மூச்சு கலந்த உன் மூச்சு
உனக்கான என்
வெளிவராத கவிதையை
வாசிக்கும்...
அப்போதும்
எதுவும் தெரியாமல்
எல்லாம் தெரிந்து
உனக்கான நாடகத்தை
நீ நடத்து...
ஆனால்,
அப்போது வருகின்ற
கண்ணீர் உன்
கடைசி கண்ணீராய் இருக்கட்டும்...
இயல்பாகவே கரைந்து போவது
என் இயல்புதானே
எனக்கொன்றும் இது புதிதில்லை ...
வசந்தம் வருவது
வாசமிக்க மலர்களுக்காகவா ?
இலையுதிர் கால
காற்றின் வெப்பம்
இன்னும் உனக்கு உறைக்கவில்லையா?
விழித்துக்கொள் ....
உன் காதல் உறைந்துபோகட்டும் ....
எதிர் கால சிற்பமாக மட்டுமே
நிலைக்கப் போகிறவள் நீ....
இது உனக்கான
என் இப்போதைய ரகசியம்...
No comments:
Post a Comment