ஆற்றில்
வெள்ளம் வற்றி
பெருகிப் போனது...
...
..
....
மஞ்சள் புடவையில்
மகாலக்ஷ்மி !
உலகின்
மொத்த இன்பங்களையும்
மஞ்சள் கயிற்றில்
கட்டிக் கொணர்ந்து
செல்ல நான்!
இதுவரை நடந்த
திருமணங்கள்
இதுபோல் இல்லை...
சுய நினைவின்றி ...
இரண்டு முடிச்சு போட்டேன்..
மூன்றாவதை
விட்டுக் கொடுக்க
மனமில்லை எனக்கு...
நம்ப முடியவில்லை...
கனவா நனவா என்று...
எனக்காக உண்ணாவிரதம்
இருந்தவளா இவள்?
எனக்குத் தெரியாமல்
என்னை நேசித்தவளா இவள்?
என்னைப் போலவே
உறங்காது தவித்தவளா இவள்?
...
நான் காதல் சொல்ல
விரைந்த அந்த நாள்
எனக்கு முன்னால்
முந்திக்கொண்டு வந்து
போட்டு உடைத்து எனை
மூர்ச்சையடையச்
செய்தவளா இவள்?
அன்று
அவள் விட்ட
ஒரு துளி கண்ணீர் ...
சிப்பிக்குள் சென்று
முத்தான
ஒரு துளி மழை...
எப்படி சமாளிப்பேன்
இவ்வளவு பெரிய பரிசு...
இவளை
அருகிலிருந்து
பார்த்துக்கொண்டே – என்
ஆயுசு முடிந்து விடுமே!!!
.....
மனதிலிருந்து சிரிக்கும்
மனிதர்கள் மட்டுமே
எங்கள் திருமணத்தில் ....
அனைவருக்கும்
பிடித்துவிட்டது என்னவளை...
அவர்களும் புண்ணியம்
அடைந்துவிட்டுப் போகட்டுமே...
இந்த இதமான உணர்வு
எனக்கு ஷக்தியை அளித்திருந்தது....
...
அவளுக்காக
அன்பு செய்ய
ஆணையிடப்பட்டிருக்கிறேன் ...
ஓர் கடற்கரை தியானம் போல
இனிப்பாக இருந்தது
எங்கள் முதல் இரவு...
அவளுக்கு இதமாக – நான்
அழுத்தமாக அன்பு செய்ய
மூடியிருந்த அவள் கண்கள்
மீண்டும் சில
முத்துக்களை உதிர்த்தன...
என்ன செய்வதென்று
தெரியாமல்
இறுக்கமாக
அணைத்துக் கொண்டேன்...
எனக்காகவே பிறந்த
என் குழந்தையாகத்
தெரிந்தாள் அவள்...
என்னுள் பாதியாக
என் ஷக்தி ..
இந்த இதமான உணர்வு
இத்தனை வருடத் தவத்திற்கு
ஞானம் அளித்தது...
...
அன்று முதல்
என்னுடைய
அதிகாலை தலைப்புச்செய்தி
அவள் முந்தானையில் இருந்தது...
...
என்னுடைய மனிபர்ஸில்
ஆஞ்சநேயர்
இருந்த இடத்தில்
அழகாகக் குடியேறியிருந்தாள்....
..
முதன்முதலில்
வெளியே சென்றது
நிஜமாகவே
அசந்துவிட்டேன்..
அவள்தான்
என்னை அழைத்துச்சென்றாள்...
அநாதை ஆஸ்ரமத்திற்கு...
அங்கே அவளுக்கு
ஏற்கெனவே
இருபத்தைந்து குழந்தைகள்....
...
இதேபோல்
இருபத்தைந்து
என் வீட்டிலும்
வேணுமாம்....
...
எனக்குப் பிடித்த பாடல்
அவளைப் பாடச் சொல்லி
கால்விரல்
சுளுக்கு எடுக்கச் சொல்வேன்...
‘சரிங்க’ மட்டும் சொல்லி
அவள் ஸ்வரத்தையும்
ஸ்பரிசத்தையும்
எனக்குப் பரிசளிப்பாள்...
..
அவளுக்கு முடியாத
சில தினங்களை
என்னுடைய அரவணைப்பில்
முடித்திருந்தாள்...
வெட்கமின்றியும்
அவள் முகம்
சிவக்கக் கண்டேன்....
சாமியாகத்தான் தெரிந்தாள் ..
இந்த இதமான உணர்வு
எனைப் பாசம் பயிலச் செய்தது...
....
No comments:
Post a Comment