எனக்கான கடவுளே!
எங்கே போய் தொலைந்தாய்?
நாடு கடத்தப் பட்டு விட்டாயா?
தன்னந்தனியே நிலவு - அதன்
நட்சத்திர நகையை
இழந்து கொண்டிருக்க,
இருண்ட இரவின் முடிவிற்கான
அறிகுறி இல்லை,
தொலை தூர காற்றின்
வருகைக்கான அறிகுறியும் இல்லை..
நடு சாம விலங்குகளின்
தேய்ந்து போன இசையும் இல்லை..
என் மனது கவி இழந்து போக,
என் எழுத்தாணி மை விலக்கி நிற்க ,
அவளின் கடைசி முனங்கலின்
நினைவுகள் மட்டுமே
என் காதுகளில் ரீங்கரிக்க ..
அடுத்து வேறு என்ன வரப் போகிறது?
எனக்கான கடவுளே!
எல்லாவற்றிற்கும் மேலாக
உன் படைப்பின் ரகசியம்
எனைக் கொல்கிறது...
நீ..நீ மட்டுமே
என் ஒரே எதிரியாக
தெரிகிறாய்....
No comments:
Post a Comment