எனக்கான கடவுளே !
அவள் உன்னுடைய
அதி அற்புத படைப்பா
அல்லது
உன் போதையின் உச்சகட்ட சாதனையா ?
அவள் எனது சொர்க்கமா
அல்லது
நரகத்தின் பாதையா?
அவள்
என்னை வேவு பார்க்கும்
உளவாளியா?
நான் அவளிடம் வீழ்கிறேனா
என்பதில் நான் உறுதியாக இல்லை !
ஆனால்
அவள் கண்களில் நான் காண்பது
உன்னை மட்டுமே !
கவனம் கொள் !
இந்த உனது துரோகம்
உன் சர்வ வல்லமையை
சந்தேகத்திற்கு உரியதாக்குகிறது ...
No comments:
Post a Comment